30 கோடி ரூபாய்க்கு சொந்தமா ஹெலிகாப்டர் வாங்கிய பால் வியாபாரி.. அவர் சொன்ன காரணத்தை பாருங்கள்..



Maharashtra dairy business man buy own helicopter

பால் வியாபாரம் செய்வதற்காக பால் வியாபாரி ஒருவர் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் போரி. இவர் சொந்தமாக ஏராளமான கறவைமாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்துவருகிறார். இந்நிலையில் ஜனார்த்தனன் சமீபத்தில் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெலிகாப்டர் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார்.

Viral News

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பால் விற்பனைக்காக குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடிக்கடி செல்லவேண்டி உள்ளது. இதனால் ஏற்படும் காலவிரயத்தை குறைக்கவே தான் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சுமார் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் ஹெலிபேட், பைலட் அறை உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகளையும் செய்துவருகிறார் ஜனார்த்தனன்.