தொட்டில் கயிறை வைத்து குழந்தைகளை சிரிக்க வைத்த தந்தை! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அதிர்ச்சி! நடுங்க வைக்கும் சம்பவம்..



madurai-electrician-accidental-death

மதுரை கோ. புதூர் பகுதியில் வசித்து வந்த முருகானந்தகோபால் (வயது 38) என்பவர், தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த அவர், சமீபத்தில் தனது குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீர் துயரம் நேர்ந்துள்ளது.

விளையாட்டுப் போக்கில், குழந்தைகளை சிரிக்க வைப்பதற்காக தொட்டில் கயிறை கழுத்தில் சுற்றி வேடிக்கை காட்டியபோது, கயிறு கசடற்றவாறு இறுகி, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சில நிமிடங்களில் உயிரிழந்தார்.

இந்த திடீர் நிகழ்வால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க காவல்துறையை தொடர்புகொண்டனர். தகவலின் பேரில் வந்த போலீசார், முருகானந்தகோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மரணச் சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி! தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல்.. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

 

இதையும் படிங்க: திருநெல்வேலி சாந்தி ஸ்வீட்ஸ் கடை அல்வா பொட்டலத்தில் தேள்! கடையில் அதிரடி ஆய்வு! திருநெல்வேலியில் பரபரப்பு..