அரசு பணியில் உள்ள மணமகள் தேவை.. "வரதட்சணை நான் கொடுக்கிறேன்" - இளைஞரின் அதிரடி அறிவிப்பு.!

அரசு பணியில் உள்ள மணமகள் தேவை.. "வரதட்சணை நான் கொடுக்கிறேன்" - இளைஞரின் அதிரடி அறிவிப்பு.!



Madhya Pradesh Man Poster Goes Viral Want Govt Employee girl to Marriage

திருமணத்திற்கு பெண் தேடி இளைஞர் வினோத முயற்சியை கையில் எடுத்து வைரலாகியுள்ளது.

இந்தியாவில் திருமணத்திற்கு அரசு வேலை, நல்ல உத்தியோகம், கைநிறைய சம்பளம் என்பது கடந்த காலங்களில் மணமகன் தரப்பை மட்டும் எதிர்பார்ப்பதாக இருந்த நிலை என்பது மாறி, காலத்தின் வளர்ச்சிக்கேற்ப பெண்களின் பக்கமும் திரும்பியுள்ளது. 

நல்ல வேலை, கை நிறைய சம்பளம் வாங்கினாலும் சிலருக்கு திருமணம் என்பது கைகூடாமல் இருக்கும். ஒரு சிலருக்கோ குறைந்தளவு சம்பளம் பெற்றாலும், அவர்களின் மனதை புரிந்துகொண்டு காலத்தின் ஓட்டத்திற்கேற்ப இருவரும் வேலைபார்த்து வாழ்க்கையை நகர்த்தும் திருமணம் நடைபெற்று முடிந்துவிருக்கிறது. 

இந்த நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிந்த்வாரா, சர் பதக் நகரில் வசித்து வரும் விகால்ப் மாள்வியா என்ற இளைஞர், அங்குள்ள சவுக் சந்தை பகுதிக்கு சென்று போஸ்டர் ஒன்றை கையில் பிடித்தவாறு நடுரோட்டில் நின்றார். 

Madhya pradesh

ஹிந்தியில் எழுதப்பட்ட அந்த போஸ்டரில், "நான் திருமணம் செய்ய அரசு உத்தியோகத்தில் இருக்கும் மணப்பெண் எதிர்பார்க்கபடுகிறது. நான் அவருக்கு வரதட்சணை கொடுக்கிறேன். நீங்கள் ஏதும் வரதட்சணை கொடுக்க வேண்டாம்" என தெரிவித்துள்ளார். 

இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகவே நெட்டிசன் ஒருவர், "நீங்கள் கொடுக்கும் வரதட்சணை மட்டும் போதாது. அவருக்கு நீங்கள் சமைத்து உணவு பரிமாறுவதையும் வாக்குறுதியாக அளித்து செயல்பட வேண்டும்" என கருத்து தெரிவித்துள்ளார்.