தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த பெண்; பணியிடத்தில் அவசர கதியில் நடந்த சோகம்..!   Madhya Pradesh Khargone women Drink Acid Accidentally 

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கார்கோன் மாவட்டத்தைச் சார்ந்தவர் ரிங்கு தாக்கரே. இவர் அங்குள்ள தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்த நிலையில், சம்பவத்தன்று அவருக்கு தாகமாக இருந்துள்ளது. இதனால் தண்ணீர் குடிக்க நினைத்தவர், அங்கு இருந்த கேனில் தண்ணீர் இருப்பதாக நினைத்து குடித்துள்ளார். 

Madhya pradesh

கேனில் சுத்தம் செய்வதற்கான ஆசிட் நிரப்பி வைக்கப்பட்டு இருந்த நிலையில், அதனை தண்ணீர் என நினைத்து மற்றொரு தொழிலாளியும் எடுத்து கொடுத்துள்ளார். 

ஆசிட்டை குடித்த பெண்மணி அலறவே, சக தொழிலாளர்களால் மீட்கப்பட்ட பெண்மணி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.