அடேய் யாருடா நீ?.. கதவுக்கு இடையில் சிக்கிய கழுத்து.. விளையாட்டு, வினையானதால் கதறல்..!Madhya Pradesh Gwalior Youth Neck Stuck in Gate Fun Ends Tragedy in Life

பள்ளி வளாகத்தில் மாணவன் செய்த விளையாட்டு வினையில் முடிந்ததால், அதிகாரிகள் இரும்பு கம்பியை வெட்டி மாணவனை பத்திரமாக மீட்டனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் மாவட்டம், ஜனக் கஞ்ச் நகரில் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வந்த மாணவன், விளையாட்டுத்தனமாக இரும்பு கதவின் இடைவெளி வழியே தனது தலையை நுழைந்துள்ளார். 

முதலில் எப்படியோ உள்ளே சென்ற தலை, மீண்டும் வெளியே எடுக்க முயற்சிக்கையில் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவன் மேற்கொண்ட பல முயற்சிகளும் தோல்வியுற, தன்னை காப்பாற்றக்கூறி அலறி இருக்கிறார். 

இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த பள்ளி ஆசிரியர்கள், அவரை காப்பாற்ற முயற்சியெடுத்து பலனில்லை. இதனையடுத்து, உள்ளூர் நகர காவல் துறையினரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த ஜனக் கஞ்ச் காவல் நிலைய அதிகாரிகள், இரும்பை வெட்டும் கத்தரிக்கோல் கொண்டு கதவின் பகுதிகளை வெட்டி பள்ளி மாணவனை பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.