தலித் இளைஞரை கடுமையாக தாக்கி, சிறுநீர் கழித்து சித்ரவதை செய்த அவலம்... உயிருக்கு போராடும் வாலிபர்.!

தலித் இளைஞரை கடுமையாக தாக்கி, சிறுநீர் கழித்து சித்ரவதை செய்த அவலம்... உயிருக்கு போராடும் வாலிபர்.!


Madhya Pradesh Gwalior Dalit RTI Activist Attacked by Village Administrative Leaders

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் மாவட்டம், பனிஹார் பராய் கிராமத்தில் வசித்து வருபவர் சஷிகாந்த் ஜாதவ். இவர் தலித் ஆர்.டி.ஐ ஆர்வலர் ஆவார். மேலும், ஆர்.டி.ஐ மூலமாக பஞ்சாயத்தில் நடந்த ஊழல் தொடர்பான தகவலைகளை கேட்டு பெற்றுள்ளார்.  

இந்த தகவலை அறிந்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் சஷிகாந்த் ஜாதவை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். மேலும், காலனியால் சாதியின் பெயரை சொல்லி அடித்து, அவரின் மீது சிறுநீர் கழித்தும் கொடுமை செய்துள்ளனர். ஒருகட்டத்தில் சிறுநீரை குடிக்க வைத்தும் சித்ரவதை செய்துள்ளனர். 

Madhya pradesh

இந்த சம்பவத்தில் 8 பேர் ஈடுபட்ட நிலையில், பலத்த காயமடைந்த சஷிகாந்த் ஜாதவ் குவாலியர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.