தனிமையில் தவித்து கள்ளக்காதலில் விழுந்த மனைவி; கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த கணவன்..! கண்டித்தும் கேட்காததால் கொடூரம்.!

தனிமையில் தவித்து கள்ளக்காதலில் விழுந்த மனைவி; கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த கணவன்..! கண்டித்தும் கேட்காததால் கொடூரம்.!


Madhya Pradesh Bhopal Wife Killed by Husband due to Affair

வேலை விஷயமாக கணவன் வெளியூருக்கு சென்றதும் கள்ளக்காதலில் விழுந்த மனைவி, கணவனின் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதால் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலை சேர்ந்தவர் ராஜேஷ். இவரின் மனைவி புனியா பாய் @ சூர்யவன்ஷி. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தொழில் விஷயத்தால் அவ்வப்போது ராஜேஷ் வெளியூர் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் வீட்டில் தனிமையில் தவித்த சூர்யவன்ஷிக்கு பக்கத்து வீட்டு இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, கணவர் வெளியூர் செல்லும் நேரத்தில் சூரியவன்ஷி கள்ளகாதலனோடு உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த தகவல் ராஜேஷுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ராஜேஷ் தனது மனைவி சூரியவன்ஷியை கண்டித்துள்ளார். ஆனால் அதனை கேட்காத சூரியவன்ஷி உல்லாசத்தில் குறியாக இருந்து வரவே, ராஜேஷ் ஆத்திரமடைந்து மனைவியை தீர்த்துக்கட்ட முடிவெடுத்துள்ளார். 

Madhya pradesh

கடந்த 14 ஆம் தேதி குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வரை காத்திருந்த ராஜேஷ், மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் வீட்டில் இருந்து அலறியபடி வெளியே வந்த ராஜேஷ், தனது மனைவியை மர்ம நபர்கள் கொலை செய்து தப்பி செல்வதாக கதறியுள்ளார். இதனைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சூர்யவன்ஷியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகையில், ராஜேஷின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் விசாரணை நடத்தியபோது உண்மை அம்பலமானது. இதனையடுத்து, ராஜேஷை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.