#வீடியோ: விவசாயியின் வயிற்றில் விழுந்த பேராசிரியை.. பழத்தை வீதியில் வீசியெறிந்து அட்டகாசம்..! பணக்கார திமிர்..!

#வீடியோ: விவசாயியின் வயிற்றில் விழுந்த பேராசிரியை.. பழத்தை வீதியில் வீசியெறிந்து அட்டகாசம்..! பணக்கார திமிர்..!


Madhya Pradesh Bhopal University Lecturer Attacked Fruit Shop Shocking Video Goes Viral

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால், அயோத்தியா நகரில் தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வரும் பெண்மணி காரில் சென்று கொண்டு இருந்தார். 

அப்போது, அங்கு பழம் விற்பனை செய்துகொண்டு இருந்த தள்ளுவண்டி, அவரது கார் மீது எதிர்பாராத விதமாக பிடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பேராசிரியை, காரை ஓரமாக நிறுத்திவிட்டு தள்ளுவண்டி கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

மேலும், பழக்கடை உரிமையாளர் கெஞ்சி பார்த்தும் விடாமல், விற்பனைக்காக வாங்கி வைக்கப்பட்டு இருந்த பப்பாளி பலன்களை கீழே தள்ளிவிட்டு புறப்பட்டு சென்றார். அங்கிருந்த நபர்கள் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.