மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம்: அரைகுறை ஆடையுடன் மக்களிடம் மன்றாடி உதவிகேட்ட துயரம்..! மாண்டுபோன மனிதம்.!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம்: அரைகுறை ஆடையுடன் மக்களிடம் மன்றாடி உதவிகேட்ட துயரம்..! மாண்டுபோன மனிதம்.!


madhya Pradesh Bhopal Minor Girl Who Mentally Affected Rape Brutally 

 

பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான குற்றத்திற்கு தண்டனைகள் கடுமையாவதே அக்குற்றங்களை குறைக்க வழிவகை செய்யும்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுரமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்.

இதனால் வேதனையுடன் பொதுமக்களிடம் அவர் உதவிகேட்டு மன்றாடிய நிலையில், அவர்கள் யாரும் பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை. அரைகுறை ஆடையுடன் இறுதியாக உதவிகேட்டு ஆசிரமத்திற்குள் சென்றுள்ளார். 

அங்கு இருந்த சாமியார், சிறுமிக்கு ஆடை வழங்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளார். காவல் துறையினருக்கும் சம்பவம் தொடர்பாக தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Madhya pradesh

மருத்துவமனைக்கு விரைந்த காவல் துறையினர், சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்தனர். சிறுமியிடம் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. 

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கூறவருவதை கூட கேட்க முன்வராமல் பொதுமக்கள் உதவி செய்ய மறுத்தது அதிர்வலையை தருகிறது. மருத்துவ பரிசோதனையில் சிறுமி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது உறுதியானது.

கயவர் கூட்டத்தின் கொடூரத்தால் சிறுமி இரத்தம் வடிந்த நிலையில் உதவிகேட்டு இருக்கிறார் என களத்தகவல் தெரிவிக்கின்றன.