சரக்கடிக்க பணம் கொடுக்க மறுத்த காதலியின் மூக்கை அறுத்த கொடூரம்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் சம்பவங்கள்.!

சரக்கடிக்க பணம் கொடுக்க மறுத்த காதலியின் மூக்கை அறுத்த கொடூரம்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் சம்பவங்கள்.!


Madhya Pradesh Bhopal Man Cut off His Live In Relationship Woman Nose She Reject Liquor Amount Paid

லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர் தனது காதலி சரக்கடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் அவரின் மூக்கை அறுத்த பயங்கரம் நடந்துள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால், கந்தவா மாவட்டத்தை சார்ந்தவர் குஷ் படேல் (வயது 40). இவர் சோனு (வயது 35) என்ற பெண்மணியுடன் பழகி வந்துள்ளார். பின்னர், இவர்கள் இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழலாம் என முடிவெடுத்துள்ளனர். 

இதனையடுத்து, தம்பதிகள் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இதில், படேல் மதுபான பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படும் நிலையில், அவ்வப்போது துணையிடம் தகராறு செய்து பணம் வாங்கி சென்று மதுபானம் அருந்தி வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையும் காலை நேரத்தில் படேல் தனது துணையிடம் மதுபானம் அருந்த ரூ.400 பணம் கேட்டுள்ளார். சோனுவோ பணம் கொடுக்க இயலாது என்று கூறவே, ஆத்திரமடைந்த படேல், சோனுவின் மூக்கை கோடரியால் வெட்டியிருக்கிறார். 

Madhya pradesh

வலியில் பெண்மணி சோனு கதறித்துடிக்கவே, அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கையில் விபரீதம் புரிந்துளளது. இதன்பின்னர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சோனுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்ற குஷ் படேலை மாலையில் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.