திருமண ஆசை காட்டி உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது - நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு!

திருமண ஆசை காட்டி உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது - நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு!



Lovers sex not harassment court judgement

சமீப காலமாக நாடு முழுவதும் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதில் ஒவ்வொரு வழக்கிலும் வழக்கின் தன்மையை பொறுத்து தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாலியல் வழக்குகளில் பெரும் சர்ச்சைக்குள்ளாவது திருமண ஆசை காட்டி உடலுறவு கொண்டு ஏமாற்றுவதாக தொடரப்படும் வழக்குகள் தான் அதிகம்.

harassment

இது போன்ற வழக்குகளில் இருவரும் விருப்பப்பட்டு உடலுறவு கொண்டதை எப்படி பாலியல் குற்றமாக கருத முடியும் என்ற விவாதங்களும் தொடர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மும்பை நீதிமன்றத்தில் இது போன்ற வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஒரு இளைஞரும், இளம் பெண்ணும் காதலித்து வந்த நிலையில், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக இளைஞர் வாக்குறுதி அளித்துள்ளார். அதன் பின்னர் இருவரும் உடலுறவில் இருந்துள்ளனர்.
ஆனால் அதன் பின்னர் அந்த இளைஞர் வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளார்.

harassment

இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அந்த இளைஞர் தன்னை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் இளைஞர் தரப்பில் தனது பெற்றோர் சம்மதம் இல்லாததால் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெற்றோர் சம்மதிக்காக காரணத்தால் திருமணம் செய்து கொள்வதாக காதலிக்கு கொடுத்த வாக்கை மீறுவதை பாலியல் வன்கொடுமை குற்றமாக கருத முடியாது என தெரிவித்துள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக காதலன் அளித்த வாக்குறுதியை மட்டும் உடலுறவு அனுமதிப்பதற்கான காரணமாக கூற முடியாது என சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.