இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
இந்த காலத்திலும் இப்படியா? 30 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை! அன்பாக வாழ்ந்த தம்பதியினருக்கு நேர்ந்த துயரம்!

முத்துப்பேட்டை அருகேயுள்ள ஓவரூர் கிராமத்தில் சோதிரியம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ். 60 வயது நிறைந்த இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. ஆனால் இருவருக்கும் குழந்தை இல்லை.
இந்நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் நல்லது, கெட்டது என எங்கு சென்றாலும். இருவரும் ஒன்றாக சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென இந்திராவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து அவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இந்திரா உயிரிழந்தார். இதனைக் கேட்டதும் அதிர்ச்சியில் நாகராஜ் மயங்கி விழுந்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, நாகராஜ் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து இருவரின் சடலத்தையும் பெற்ற உறவினர்கள் ஒன்றாகவே அடக்கம் செய்தனர்.மேலும் குழந்தை இல்லாத போதும், இத்தனை காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்தவர்கள், சாவிலும் பிரியாமல் இருந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.