"லித்தியம்".... இந்திய நிறுவனங்கள் காஷ்மீருக்குள் நுழைந்தால் தாக்குதல் நடத்துவோம்; மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை ...!

"லித்தியம்".... இந்திய நிறுவனங்கள் காஷ்மீருக்குள் நுழைந்தால் தாக்குதல் நடத்துவோம்; மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை ...!



"Lithium".... We will attack if Indian companies enter Kashmir; Terrorist organization alert to central government...

5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் ரைசி மாவட்டத்தில் உள்ள சலால் ஹைமனா பகுதியில் செய்யப்பட்ட ஆய்வில் லித்தியம் கனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் அந்த பகுதியில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பில் லித்தியம் முக்கிய மூலப்பெருளாகும். செல்போன், லேப்டாப், டிஜிட்டல் கேமரா போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பேட்டரியின் முக்கிய மூலப்பொருளாக லித்தியம் இருக்கிறது.

இந்தியா 100 சதவிகிதம் லித்தியத்தை இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது காஷ்மீரில் லித்தியம் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அது சார்ந்த இறக்குமதி அதிக அளவில் குறையும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், காஷ்மீரில் லித்தியம் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து "மக்களின் பாசிச எதிர்ப்பு முன்னணி" என்ற பயங்கரவாத அமைப்பு, காஷ்மீரின் வளங்களை சுரண்ட விட மாட்டோம் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

எந்த சூழ்நிலையிலும் ஜம்மு காஷ்மீரின் வளங்களை சுரண்ட விடமாட்டோம். இந்த வளங்கள் இங்குள்ள மக்களுக்கு சொந்தமானது. அது ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். மோசமான இந்துத்துவ திருடர்கள் எங்கள் வளங்களை திருட அனுமதியில்லை. 

இந்திய நிறுவனங்கள் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்தால், தாக்குதல் நடத்துவோம். ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி இந்தியாவுக்குள்ளும் தாக்குதல் நடத்துவோம், என்று அந்த பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.