மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு ஹாயாக வந்த 5 சிங்கங்கள்.! வெளியான ஷாக் வீடியோ.!

மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு ஹாயாக வந்த 5 சிங்கங்கள்.! வெளியான ஷாக் வீடியோ.!


lions on road

குஜராத்தில் சாலையில் 5 சிங்கங்கள் உலா வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா சமயத்தில் மக்கள் குடியிருக்கும் நகரப் பகுதிகளை சுற்றி காட்டு விலங்குகள் உலா வரும் வீடியோக்கள் இணையத்தில் சமீபகாலமாக வெளியாகி வருகிறது. இந்தநிலையில், குஜராத்தின் அம்ரேலியில் ஒரு பிரதான சாலையில் சிங்கங்கள் அசால்ட்டாக நடந்து செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அம்ரேலியில் ஒரு பிரதான சாலையில், இரண்டு குட்டிகள் உட்பட 5 சிங்கங்களின் குடும்பம் நடந்து சென்று துறைமுகத்தை அடைந்தது. அந்த வீடியோவை Old Bombay என்ற பக்கம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில், சிங்கங்கள் காட்டில் நடப்பது போலவே சாலையில் சாதாரணமாக  சிங்கங்கள் நடந்து செல்கிறது. சிங்கங்கள் நடப்பதைக் கண்டபின், துறைமுகத்தில் இருந்த மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக பாதுகாப்பு ஊழியர்கள் இந்த சம்பவத்தை வன அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

சிங்கங்கள் உணவு தேடி வந்த நிலையில் வழிதவறி, மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என பலரும் அந்த வீடியோவிற்கு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.