பார்க்கும்போதே பதறுது..!! தூங்கிக்கொண்டிருந்த நாயை தூக்கிச் சென்ற சிறுத்தை - CCTV காட்சிகள்..



Leopard hunts pet dog sleeping outside house in Maharashtra

வீட்டின் வாசத்தில் தூங்கிக்கொண்டிருந்த நாய் ஒன்றை சிறுத்தை கடித்து தூக்கிச்செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள கிராமம் ஒன்றில் நாய் ஒன்று இரவு நேரத்தில் வீட்டின் வெளியே உள்ள வாசலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த சிறுத்தை ஒன்று அந்த நாய் தூங்கிக்கொண்டிருக்கும் இடத்திற்கு சென்று, நாயை கழுத்து பிடியாக பிடித்து, அதனை தூக்கி செல்கிறது.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தநிலையில் தற்போது அந்த காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.