அரசியல் இந்தியா சினிமா

மோடியை விடாது துரத்தும் சிம்புவின் நாயகி , மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பதிவு.!

Summary:

மோடியை விடாது துரத்தும் சிம்புவின் நாயகி , மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பதிவு.!

மோடி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என நடிகை ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ramya க்கான பட முடிவு

 பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவருமான நடிகை ரம்யா சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சையை கிளப்பும் பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் பிரதமர் மோடி தன் மெழுகு சிலை மீது தானே 'திருடன்' என எழுதிக் கொள்வது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

 இதனால் ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 இந்நிலையில் நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர் கான் ஆகியோர் நடிக்கும் 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இது இந்தியாவை ஆட்சி புரிந்த பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான கடற்கொள்ளையர்கள் போர் நடத்துவது குறித்த படம்.

இதில் நடிகர் அமீர்கான், அனைவரையும் ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.மேலும்  அவர் ஒரு காட்சியில் நம்பிக்கை துரோகம் என்பது எனது சுபாவம் என பேசுவார்.இந்நிலையில் ரம்யா மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் , ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு மோடி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்பதை போல் பதிவிட்டுள்ளார்.

இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 


Advertisement