இந்தியா உலகம்

இம்ரான்கானிடம் மோடி கட்டாயமாக பாடம் படிக்கணும்.! ஆவேசமாகி பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை!

Summary:

kushpoo compare modi with imrankhan

இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்த பாகிஸ்தான் விமானப்படையை இந்திய விமானப்படையினா் துரத்தி அடித்து விரட்டினர். மேலும் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பதிலடி தாக்குதல் நடத்திய போது எதிர்பாராதவிதமாக போா் விமானம் விபத்துக்குள்ளானது. இந்நிலையில் இந்திய விமானப்படையைச் சோ்ந்த விமானி அபிநந்தன் பாராசூட் உதவியுடன் பாகிஸ்தான் எல்லையில் தரையிறங்கினார். 

பின்னர் பாகிஸ்தானில் தரையிரங்கிய அபிநந்தனை உடனடியாக பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.பின்னர் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் விமானி அபிநந்தனை பாதுகாப்பாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று  நெருக்கடி கொடுத்தது.

abinandan க்கான பட முடிவு

 இதனைத் தொடா்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான்  இந்திய விமானப்படை அதிகாாி அபிநந்தனை நிபந்தனைகள் இன்றி விடுவிப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

அதன்படி இன்று பாகிஸ்தானின் லாகூா் வரை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அபிநந்தன், லாகூரில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதிக்கு காா் மூலம் அழைத்து வரப்பட்டாா். இருநாட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடா்ந்து அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டாா்.

kushboo க்கான பட முடிவு

இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையிலும், அமைதியின் அடிப்படையிலும் இந்திய விமானப்படை அதிகாாி அபிநந்தனை விடுவித்த பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானிடம் இருந்து இந்திய பிரதமா் நரேந்திர மோடி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடா்பாளா் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தொிவித்துள்ளாா். 


Advertisement