அந்த ஒரு நொடி.. நினைச்சாலே நடுங்குது! நூலிழையில் உயிர்தப்பிய சிறுவன்! வைரலாகும் பதறவைக்கும் வீடியோ!!

அந்த ஒரு நொடநூலிழையில் உயிர்தப்பிய சிறுவன்! வைரலாகும் பதறவைக்கும் திக் திக் வீடியோ!!


kid-escape-from-accident-footage-viral

சிறுவன் ஒருவன் சைக்கிளில் மிக வேகமாக சாலையை கடக்க முயற்சித்தபோது இருசக்கர வாகனத்தில் மோதி தூக்கி வீசப்பட்டு கோர விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிபறம்பு பகுதியில் சிறுவன் ஒருவன் மண்சாலையில் தனது மிதிவண்டியில் வேகமாக வந்துகொண்டு இருந்துள்ளான். அப்பொழுது அவன் சைக்கிளிலேயே மெயின் சாலையில் ஏறி அதனை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது சற்றும் எதிர்பாராதவிதமாக அந்த சிறுவன்  சாலையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார்.

இதில் அவர் சாலையின் மறுபக்கம் தூக்கி வீசப்பட்டுள்ளார். ஆனால் அந்த நொடியே சாலையில் மின்னல் வேகத்தில் பேருந்து ஒன்று வந்துள்ளது. சாலையில் கிடந்த சைக்கிள் மீது அந்த பேருந்து ஏறி அது நொறுங்கிப் போனது. இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக, இருசக்கர வாகனம் மோதி சாலையின் மறுபுறம் தூக்கி வீசப்பட்டதால் அந்த சிறுவன் உயிர் தப்பியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது.