இந்தியா

இரவில் தனியாக இருக்கும் பெண்களின் மெத்தைக்கு கீழ் படுத்துக்கொள்ளும் இளைஞர்..! சிசிடிவி மூலம் கைது செய்த போலீசார்.!

Summary:

Kerala youth hide alone females house and watch

பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை தேடிப்பிடித்து இரவில் அவர்களின் கட்டில்களுக்கு அடியில் ஒளிந்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளன்னர்.

கேரளாவின் கோழிக்கோடு அருகே பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளில் யாரோ கற்களை கொண்டு எறிவதாகவும், இரவு நேரங்களில் வீட்டுக் கதவை தட்டுவதாகவும் போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. இதனை அடுத்து புகார் வந்த பகுதிகளில் இருந்த CCTV காட்சிகளை சோதனை செய்து கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த 26 வயதான முகமது அஜ்மல் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளில் அஜ்மல் கதவை தட்டுவதும், கற்களை கொண்டு எறிவதும் உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அவர் செய்த மேலும் சில அதிர்ச்சி காரியங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தனியாக இருக்கும் பெண்களின் வீட்டிற்குள் சென்று, அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் படுக்கை மெத்தைக்கு அடியில் படுத்துக்கொள்வதும், அவர்கள் கண்களுக்கு தெரியாமல் அறையில் மறைந்திருந்து பார்ப்பதையும் வழக்கமாக கொட்டுள்ளார் அஜ்மல். இதுபோன்ற பாலியல் ரீதியான குற்றங்களையும் அஜ்மல் செய்ததை அடுத்து அவர் மீது பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்துளனர்.


Advertisement