இந்தியா

சிக்கன் குழம்பு சாப்பிட்டு உயிருக்கு போராடிய கணவன்! தண்ணீரில் சயனைட் கலந்து கொடுத்த மனைவி!

Summary:

Kerala serial murder jolly case update

கேரளாவை சேர்ந்த ஜோலி(47) என்ற பெண் தனது கணவன் உட்பட தனது குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை 14 வருடங்களாக திட்டம் போட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இந்த வழக்கு குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 1800 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், ஆடம்பர வாழ்க்கை, பணம், உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு ஜோலி தனது முதல் கணவர், இரண்டாவது கணவரின் முதல் மனைவி உட்பட மொத்தம் 6 பேரை திடம் போட்டு கொலை செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தனது முதல் கணவருக்கு சிக்கன் குழம்பில் சயனைடு கலந்து கொடுத்துள்ளார் ஜோலி.

சயனைடு கலந்த சிக்கன் குழம்பை சாப்பிட்டுவிட்டு, தொண்டை வறண்டு கணவன் தண்ணீர் கேட்கும்போது அந்த தண்ணீரிலும் ஜோலி தனது கணவனுக்கு சயனைடு கலந்து கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளன்னர்.


Advertisement