இந்தியாவில் பொது இடத்தில் ஐபோனை விட்டுச்சென்ற வெளிநாட்டு இளைஞர்! அதுவும் 2 மணி நேரம் ஆச்சு... ஒருத்தரும் தொட கூட இல்ல!



kerala-public-trust-iphone-left-unattended-for-hours

இந்தியா, பல்வேறு கலாச்சாரங்களையும் பன்முகத்தன்மையையும் கொண்ட நாடாக, உலகமெங்கும் இருந்து சுற்றுலா பயணிகளை தொடர்ந்து ஈர்க்கிறது. அத்தகைய சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணி கேரளாவில் பொதுவிடத்தில் தனது ஐபோனை விட்டு சென்றார். சாதாரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மிதக்கும் அந்த இடத்தில், அப்போதும் 2 மணி நேரத்துக்கும் மேலாக அந்த செல்போன் அங்கேயே இருந்தாலும் யாரும் அதை தொடவே இல்லை.

இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி பெரும் கவனம் பெற்றுள்ளது.கேரளாவின் பண்பும் நம்பிக்கையும் பிரதிபலிக்கும் இந்தச் சம்பவம் யூனெஸ் சரூன் என்ற இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் மூலம் வெளியிடப்பட்டது. அவர் மாலை 4:30 மணியளவில் பொதுவிடத்தில் தனது ஐபோனை விட்டு சென்றார். அதன்பிறகு பலர் அப்புறம் சென்றாலும், யாரும் அந்த ஐபோனை எடுக்கவில்லை. இதனால் இந்தியாவின் பாதுகாப்பு, மக்கள் நம்பிக்கை போன்றவை மீண்டும் பலரின் பாராட்டை பெற்றுள்ளன.

இந்த வீடியோ தற்போது 4 கோடி கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது மற்றும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்களையும் பெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் இது பற்றி பல கருத்துக்கள் வருகின்றன. பலர் இந்திய மக்களின் நல்ல பண்பை பாராட்டுகின்றனர். அதே நேரத்தில் சிலர் "நீங்கள் இந்தியாவின் சிறந்த பக்கத்தில் இருப்பீர்கள்; இன்னொரு பக்கத்தைக் காணுங்கள்" என்ற விமர்சனங்களையும் வெளியிடுகின்றனர்.

இதையும் படிங்க: நம்பவே முடியல.... மரத்தில் படமெடுத்து அமர்ந்திருந்த இச்சாதாரி நாகினி! இணையத்தில் தீயாய் வைரலாகும் காணொளி!

இந்தக் காணொளி இந்தியாவின் பாதுகாப்பு நிலையை வெளிப்படுத்துவதோடு, பொதுமக்களின் நேர்மை மற்றும் நம்பிக்கை பற்றிய ஒரு அழகான உதாரணமாகும். உலகம் முழுவதும் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாகப் புரிய வேண்டுமென நம்புகிறோம்.

இதையும் படிங்க: மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி! சேந்தமங்கலம் கிராமத்தில் பரபரப்பு....