கவர்ச்சி உடையணிந்து இருந்ததால், அந்த புகார் பாலியல் தொல்லையில் வராது - நீதிமன்றம் பகீர் உத்தரவு.!

கவர்ச்சி உடையணிந்து இருந்ததால், அந்த புகார் பாலியல் தொல்லையில் வராது - நீதிமன்றம் பகீர் உத்தரவு.!



Kerala Kozhikode Court Bail to Sexual Harassment Accuse

பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய பெண் கவர்ச்சி உடையணிந்து இருந்ததால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன்ஜாமின் வழங்கப்படுகிறது. கவர்ச்சி உடையணிந்து இருந்தமையால் அது பாலியல் தொல்லை 354 ஏ சட்டப்பிரிவின் கீழ் வராது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி எழுத்தாளர்  சிவிக் சந்திரன் (வயது 74), பெண் எழுத்தாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2020-ல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் சிவிக் சந்திரனின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சிவிக் சந்திரன் தனக்கு முன்ஜாமின் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இம்மனுவை விசாரணை செய்த நீதிபதி சிவிக் சந்திரனுக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். 

KERALA

நீதிபதிகளின் விசாரணையின்போது, மனுதாரர் சமர்ப்பித்துள்ள போட்டோக்கள் மூலமாக புகாரளித்த பெண் பாலுணர்வை தூண்டும் வகையிலான ஆடையை அணிந்து உறுதியாகிறது. இதனால் 74 வயது ஆகும் மாற்றுத்திறனாளி நபர் தன்னை வலுக்கட்டாயமாக மடியில் அமரவைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறுவதில் நம்பிக்கை இல்லை. 

ஆதலால், பாலியல் பலாத்கார வழக்கான சட்டப்பிரிவு 354 ஏ குற்றம் சாற்றப்பட்ட நபருக்கு பொருந்தாது. இதனால் முன்ஜாமின் வழங்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.