13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
கொதிக்கும் பால் ஊற்றி 2 வயது குழந்தை பரிதாப பலி.. பெற்றோர்களே சமயலறையில் கவனமாக இருங்கள்.!
சுடவைத்த பாலை தாய் கையில் பாத்திரத்துடன் தூக்கியபோது, கை இடறி குழந்தையின் மீது பால் ஊற்றியதில் சிறுமி பரிதாபமாக பலியாகினர்.
கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம், காஞ்சிரப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் பிரின்ஸ் தாமஸ். இவரின் மனைவி தியா மேத்யூ. தம்பதிகளின் மகள் சேரா மரியா பிரின்ஸ் (வயது 2).
இந்நிலையில், சம்பவத்தன்று மேத்யூ தனது வீட்டில் டீ தயாரிக்க பாலை அடுப்பில் வைத்து சுடவைத்துக்கொண்டு இருந்துள்ளார். பால் சூடான பின்னர் பாத்திரத்தை கையில் எடுத்துள்ளார்.
அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக பால் 2 வயது குழந்தை செரா மரியா மீது விழுந்துள்ளது. இதனால் படுகாயமடைந்த குழந்தையை மீட்ட குடும்பத்தினர் எருமேலியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை, இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.