இந்தியா

டிரைவர் அங்கிள்.. மரத்துல தாவி டயர்டா இருக்கு, கொஞ்சம் தூரம் வாறன்.. குரங்கு அட்ராசிட்டி.!

Summary:

டிரைவர் அங்கிள்.. மரத்துல தாவி டயர்டா இருக்கு, கொஞ்சம் தூரம் வாறன்.. குரங்கு அட்ராசிட்டி.!

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம், கட்டப்பனை பகுதியில் இருந்து மூணாறு நோக்கி கேரள மாநில போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசு பேருந்து பயணித்துக்கொண்டு இருந்தது. 

இந்த பேருந்து, அங்குள்ள வெள்ளத்தூவல் பகுதி அருகே மலைப்பாதையில் மெதுவாக சென்றுகொண்டு இருந்தது. இதன்போது, வனப்பகுதியில் இருந்து வந்த குரங்கு திடீரென பேருந்துக்குள் தாவியுள்ளது.

பின்னர், பேருந்தின் ஓட்டுனருக்கு பின்புறம் உள்ள கம்பியை பிடித்தவாறு அமர்ந்துகொண்டு குரங்கு, எவ்வித பயனும் இன்றி பேருந்தில் பயணம் செய்துள்ளது. இதனைக்கண்ட பயணிகள் இந்த நிகழ்வை தங்களின் அலைபேசியில் வீடியோவும் பதிவு செய்துள்ளனர். 

பேருந்தின் ஓட்டுநர் இதனை கவனிக்காமல் பேருந்தை இயக்கிக்கொண்டு இருந்த நிலையில், பயணிகள் ஓட்டுனரிடம் குரங்கு இருப்பதை தெரிவித்ததும் பேருந்தை நிறுத்தியுள்ளார். பின்னர், பயணிகள் சத்தம் எழுப்பவே, குரங்கு ஜன்னல் வழியாக மீண்டும் வனத்திற்குள் சென்றது. 


Advertisement