இந்தியா

படிப்படியாக குறைந்த கொரோனா..! கள்ளுக்கடைக்கு அனுமதி அளித்த கேரள அரசு..!

Summary:

Kerala government gave permission to open the kal

இந்தியாவில் முதன் முதலில் கேரளாவில் தான் அதிகளவில் கொரோனா பரவி வந்த நிலையில் தற்போது அதன் தாக்கம் படிபடியாக குறைந்து கட்டுக்குள் வந்து விட்டது. கேரளாவில் மக்கள் அதிகம் வெளிநாடுகளில் வேலை செய்து வந்ததை அடுத்து அம்மாநிலத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரவியது.

ஆனால் கேரள அரசின் அதிரடியான செயலால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. இந்நிலையில் தற்போது கேரள அரசு படிபடியாக ஊரடங்கை தளர்த்து வருகிறது. ஆனால் நாடு தழுவிய ஊரடங்கு முடிந்த பிறகு தான் மதுக்கடைகள் திறக்கப்படும் என கூறியது.

தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதால் கேரள மதுப்பிரியர்கள் மது மற்றும் கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி தற்போது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு மாதங்களாக முடிப்பட்டிருந்த கள்ளுக்கடையை மட்டும் திறக்க அனுமதி அளித்துள்ளது அரசு.

மேலும் தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கள் விற்பனை செய்ய வேண்டும். 5 நபருக்கு மேல் வரிசையில் நிற்க கூடாது. ஒரு நபருக்கு ஒன்றை லிட்டர் மட்டும் கள் விற்பனை செய்ய வேண்டும். கள் வாங்க வரும் நபர் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள அரசு விதித்துள்ளது. 


Advertisement