இந்தியா

அதிர்ச்சி! இறக்கும்போது 20 கிலோவாக மாறிய 27 வயது இளம் பெண்! கேரளாவில் நடந்த கொடுமை.

Summary:

Kerala girl reduced to 20 kg when dead

பெண்களுக்கு எதிரான வரதனை கொடுமை ஓரளவிற்கு குறைந்திருந்தாலும் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் இன்னும் இதுபோன்ற கொடுமைகள் நடக்கத்தான் செய்கின்றன. கேரளாவில் 27 வயது இளம் பெண் ஒருவரை வரதட்சணையால் கொடுமை படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள கொல்லம் அருகே இரண்டு குழந்தைகளின் தாயான துஷாரா (27), கடந்த வாரம் கொல்லம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரது இறப்பில் சந்தேகம் இருக்கக்கூடும் என்று புகார் கூறியதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரதித்த போலீசார் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.  துஷாரா தன் கணவர் மற்றும் மாமியாரால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்ததாக கூறியுள்ளனர்.

மேலும் துஷாரா இறக்கும்போது அவரது உடலில் சதையே இல்லை என்றும், வெறும் 20 கிலோதான் இருந்தார் என்றும் அதிர்ச்சி தகவலையும் காவல்துறையினர் கூறியுள்ளனர். துஷாரா ஒரு தனி அறையில் அடைக்கப்பட்டு அவருக்கு வெறும் சக்கரை தண்ணிதான் குடிக்க கொடுத்ததாகவும், உப்பு நீரில் ஊற வைத்த அரிசியைத்தான் சாப்பிட கொடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் துஷாராவின் கணவன் மற்றும் மாமியாரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.


Advertisement