இந்தியா

எதிர்பார்ப்பின்றி இரவு பகலாக மீட்புணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு, கேரள முதல்வர் கொடுத்த சர்ப்ரைஸ்.!

Summary:

எதிர்பார்ப்பின்றி இரவு பகலாக மீட்புணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு, கேரள முதல்வர் கொடுத்த சர்ப்ரைஸ்.!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து  பெய்து வருவதால் நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகளவில் உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி மழை வெள்ளம் சூழ்ந்து ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. விவசாய பயிர்களும் மழையால் நாசமடைந்துள்ளது.

இவ்வாறு பெருகி ஓடும் வெள்ளத்தால்,நிலச்சரிவால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது.மேலும் வெள்ளத்தில் சிக்கி பலரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

     flood in kerala க்கான பட முடிவு

மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழு, இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை ஈடுபட்டு வருகின்றன.மேலும் அவர்களுடன் மீனவர்களும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் தாங்களாகவே முன்வந்து படகுகளின் மூலமாக நிவாரணப் பொருள்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது  எனப் பல மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் மீனவர்களின் சேவையை கௌரவிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.


அதில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு படகுக்கும் தினமும்  3,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், மீட்புப் பணிகளின்போது சேதமடைந்த படகுகளைப் பழுது பார்ப்பதற்கான செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் எனக் கேரள முதல்வர்  அறிவித்திருக்கிறார்.


Advertisement