இந்தியா

கொரோனா எதிரொலி! கேந்திர வித்யாலயா பள்ளி விடுத்த அதிரடி அறிவிப்பு!

Summary:

Kendira vidyalaya announce all students pass

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ்  தற்போது உலகெங்கும் 180 நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் பரவிய இந்த கொடிய வைரஸால் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடெங்கிலும் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பள்ளிகள் கல்லூரிகள்,  வணிக வளாகங்கள் மூடப்பட்டது.பேருந்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேந்திர வித்யாலயா பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர், மாணவிகளை ஆல்பாஸ் போட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Advertisement