"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
தேர்தல் வெற்றிக்கு பிறகு அனுமார் கோவிலுக்கு சென்ற கெஜ்ரிவால்! கெஜ்ரிவாலுக்கு, பிரசாந்த் கிஷோரின் ஆலோசனை என்ன?
டெல்லியில் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்குத் துவங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று வந்தது.
நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால், மூன்றாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா 8 தொகுதிகளில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை.
தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும், ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்தன. அதேபோல் தேர்தல் முடிவும் அமைந்தது. இந்தநிலையில் டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் 3-வது முறையாக டெல்லி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் வியூகங்களை, பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்தார். 'மத்திய அரசின், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்கள் குறித்து, பிரசாரத்தில் எந்த எதிர்ப்பும் வேண்டாம். மக்களுக்கான திட்டங்களையும், அரசின் சாதனைகளையும் மட்டுமே பிரச்சாரத்தில் பேசுங்கள். இந்து கோவிலுக்கு செல்லுங்கள், அனுமார் பாடல் பாடுங்கள், என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பிரசாந்த் கிஷோர் தேர்தலுக்கு முன்பு கூறினார்.
தேர்தல் வெற்றிக்கு பிறகு அனுமார் தங்களை ஆசீர்வதித்து இருப்பதாகவும், டெல்லி மக்கள் உருவாக்கி இருக்கும் வளர்ச்சிக்கான இந்த புதிய அரசியல் இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் என்றும், டெல்லி மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற இறைவன் தங்களுக்கு கூடுதல் பலத்தை தரவேண்டும் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார். இதனையடுத்து துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மற்றும் தனது குடும்பத்தினருடன் கன்னாட் பிளேசில் உள்ள அனுமார் கோவிலுக்கு சென்று கெஜ்ரிவால் சாமி கும்பிட்டார்.