இந்தியா

நாடே பேரதிர்ச்சி.. தண்டவாளத்தில் 17 வயது கல்லூரி மாணவியின் சடலம்..!

Summary:

நாடே பேரதிர்ச்சி.. தண்டவாளத்தில் 17 வயது கல்லூரி மாணவியின் சடலம்..!

17 வயது கல்லூரி மாணவியின் சடலம் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், அவரது மரணத்தில் உள்ள மர்மம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்திரகன்னடா மாவட்டம், ஹொன்னவர் பகுதியை சார்ந்த கல்லூரி மாணவி வித்யா கவுடா (வயது 17). இவர் அங்குள்ள முகவா அல்லேகரி தாலுகாவில் உள்ள அனந்தவாடி கோட்டா பகுதியில் தாய் - தந்தையுடன் வசித்து வருகிறார். 

இவர் சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற நிலையில், பின்னர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பெற்றோர்கள் மகளை பல இடங்களில் தேடியும் காணவில்லை. அவருக்கு தொடர்புகொள்ள முயற்சித்தும் அழைப்பை எடுக்கவில்லை. இதனையடுத்து, பெற்றோர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் இரயிலில் அடிபட்டு கிடப்பதை போல இருப்பதாக அனந்தவாடி இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பெண்ணின் சடலம் குறித்த தகவல் வித்யாவின் வீட்டாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர்கள் வந்து பார்க்கையில் பிணமாக இருப்பது தங்களின் மகள் என கண்ணீருடன் உறுதி செய்துள்ளனர். 

இதனையடுத்து, மாணவி வித்யா கவுடா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்ய்யப்பட்டு உடல் தண்டவாளத்தில் வீசப்பட்டதா? அல்லது இரயிலில் பயணம் செய்கையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்ற பல்வேறு கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement