அரைபோதை ஆம்புலன்ஸ் ஓட்டுனரால் நோயாளி உட்பட 4 பேர் துள்ளத்துடிக்க பலி.. பரபரப்பு வீடியோ.. பகீர் காரணம்.!

அரைபோதை ஆம்புலன்ஸ் ஓட்டுனரால் நோயாளி உட்பட 4 பேர் துள்ளத்துடிக்க பலி.. பரபரப்பு வீடியோ.. பகீர் காரணம்.!



karnataka-udupi-toll-plaza-ambulance-accident

முறையான பராமரிப்பு இல்லாத வாகனத்தை போதையில் இயக்கியதால் அவசர ஊர்தியில் சிகிச்சைக்கு சென்ற குடும்பமே பலியாகியுள்ளது. அரை போதை ஓட்டுனரின் அலட்சியத்தால் நடந்த சோகத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி, பைந்தூர் சிரூர் சுங்கச்சாவடி மீது அவசர ஊர்தி மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அவசர ஊர்தியில் இருந்த நோயாளி உட்பட 4 பேர் பலியான நிலையில், இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பாக பைந்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், உத்திரகன்னடா மாவட்டம் ஒண்ணாவார் நகரில் வசித்து வரும் லட்சுமண நாயக், மனைவி ஜோதி நாயக், உறவினர்கள் மகாதேவ் நாயக், லோகேஷ் நாயக் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. இதில், உடல்நலமற்று இருந்த லட்சுமண நாயக்கை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சோகம் நடந்தது. 

மேலும், அவசர ஊர்தி ஓட்டுநர் ரோஷன், சுங்கச்சாவடி ஊழியர்கள் 5 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல் துறையினரின் விசாரணையை தொடர்ந்து பைந்தூர் காவல் துறையினரால் ஓட்டுநர் ரோஷன் கைது செய்யப்பட்டார். அவர் மதுபோதையில் அதிவேகத்துடன் அவசர ஊர்தியை இயக்கி வந்ததும், பராமரிப்பு இன்றி வாகனத்தை இயக்கியதும் விபத்திற்கு காரணம் என்பது உறுதியானது.