
நாடோடி இளைஞரின் குடும்பத்தை மிரட்டிய பெண் தாசில்தார்.. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம், சித்தநாயக்கனஹள்ளி கெடிகேஹள்ளியில் 11 நாடோடி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால், நாடோடி சமுதாயத்தை சேர்ந்த பரமேஷ் உட்பட சிலரின் குடிசை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
இதனால் 11 குடும்பத்தினர் அரசின் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட நிலையில், 14 நாட்களுக்கு பின்னர் தாசில்தார் தேஜஸ்வினி முகாமில் இருந்து 11 குடும்பத்தினரை வெளியேற கூறியுள்ளார். இதனால் பரமேஷ் தனது குடும்பத்தினருடன் தாலுகா அலுவலத்திற்கு சென்று முகாமில் தங்க அனுமதி கேட்டுள்ளார்.
இதனை ஏற்க மறுப்பு தெரிவித்த தாசில்தார், பரமேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினரை தகாத வார்த்தையால் பேசி, ரௌடி பட்டியலில் பெயரை சேர்த்துவிடுவேன், ஆதாரை கருப்பு பட்டியலில் இணைத்துவிடுவேன் என மிரட்டி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக பரமேஷ் கடந்த 2021 டிசம்பர் 3 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில், பரமேஷ் எஸ்.சி., எஸ்.டி ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற ஆணையம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடவே, காவல் துறையினர் தாசில்தார் தேஜஸ்வினி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement