மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
கள்ளக்காதலை கண்டித்த கணவன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. மனைவி உதவியுடன் நடந்த பயங்கரம்.!
குடிபோதையில் கணவன் சுற்றி திரிந்ததால் கள்ளக்காதல் வயப்பட்ட பெண், கள்ள காதலனுடன் சேர்ந்து கணவரை எரித்துக்கொன்ற பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம், சிரா காளசிவனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜு. இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவரின் மனைவி மீனாட்சி. ராஜுவுக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், மதுபோதையில் மனைவியை துன்புறுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதனிடையே, மீனாட்சிக்கும் - அதே கிராமத்தில் வசித்து வந்த ராஜேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளது.
இந்த விவகாரம் ராஜுவுக்கு தெரியவரவே, அவர் இருவரையும் கண்டித்து கள்ளக்காதலை கைவிடக்கூறி அறிவுறுத்தியுள்ளார். கள்ளக்காதல் ஜோடி அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையில், மீனாட்சி - ராஜேஷ் சேர்ந்து ராஜூவை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
இவர்களின் திட்டப்படி நேற்று ராஜூவின் தோட்டத்தில் வைத்து சமாதானம் பேசலாம் என ராஜேஷ் மதுபானம் வாங்கி சென்ற நிலையில், ராஜுவுக்கு மதுவை கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அவருக்கு போதை ஏறியதும் ராஜேஷ் ராஜுவின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து, உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
தோட்டத்தில் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் விரைந்து வருகையில் ராஜுவின் சடலம் எரிந்துகொண்டு இருந்துள்ளது. தீயை அணைத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது. இதனையடுத்து, ராஜுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், ராஜேஷ் மற்றும் மீனாட்சியை கைது செய்துள்ளனர்.