தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
மாமியார், மருமகன், மகள் என குடும்பமே ஏரியில் குதித்து தற்கொலை..! அனாதையான பச்சிளம் பிஞ்சு.!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்நகர் மாட்டம், மாகடி சொலூரு கிராமத்தை சார்ந்தவர் சித்தம்மா (வயது 55). இவரது மருமகன் ஹனுமந்தரா (வயது 35). மகள் சுமித்ரா (வயது 30), பேத்தி கீர்த்தனா (வயது 10). ஹனுமந்தரா விவசாய கூலித்தொழிலாளியாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர்கள் அனைவரும் கிராமத்தில் இருக்கும் ஏரிக்கு சென்று, திடீரென தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் ஏரியில் குதித்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக விரைந்து செயல்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
ஆனால், அவர்களால் சிறுமி கீர்த்தனாவை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மீதமுள்ள 3 பேரும் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் பிறரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், குடும்பத்தினரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.