இந்தியா

திருமணம் செய்துவைக்காத விரக்தியில் மகன் விபரீத முடிவு.. தலைநசுங்கி துடிதுடித்து பலியான தந்தை.!

Summary:

திருமணம் செய்துவைக்காத விரக்தியில் மகன் விபரீத முடிவு.. தலைநசுங்கி துடிதுடித்து பலியான தந்தை.!

தனக்கு திருமணம் செய்து வைக்காத விரக்தியில் மகன் தந்தையை படுகொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டம், தேவதுர்கா கெப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பசவராஜப்பா (வயது 75). இவரின் மகன் ஜெகதீஷ் (வயது 35). பசவராஜப்பா காவல்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். ஜெகதீஷுக்கு தற்போது வரை திருமணம் ஆகாத நிலையில், தந்தையிடம் திருமணம் செய்துவைக்க கூறி மகன் சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாவராஜப்பா தனது மனைவியுடன் ராய்ச்சூர் நகரில் உள்ள மகள் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, அருகே இருந்த மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்குள்ள கோசாலே சாலையில் நடந்துசென்றுகொண்டு இருக்கும் போது, தந்தையை இடைமறித்த மகன் ஜெகதீஷ் தகராறு செய்துள்ளார். 

தகராறில் ஆத்திரமடைந்த ஜெகதீஷ் தந்தையை கீழே தள்ளி அடித்து, உதைத்து சாலையோரம் இருந்த கல்லைத்தூக்கி தலையில் போட்டுள்ளார். இதனால் பசவராஜப்பா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அங்கிருந்து ஜெகதீஷ் தப்பி செல்லவே, பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பசவராஜப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஜெகதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


Advertisement