இன்ஸ்டாவில் ஆபாசமாக திட்டி சண்டை.. விரோதியை விரோதத்தால் படுகொலை செய்த நட்புகள்.!

இன்ஸ்டாவில் ஆபாசமாக திட்டி சண்டை.. விரோதியை விரோதத்தால் படுகொலை செய்த நட்புகள்.!


Karnataka Mysore Man Murder

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர், உன்சூர் நகரை சார்ந்தவர் பீரேஷ் (வயது 23). இதே பகுதியில் வசித்து வருபவர்கள் நிதின் மற்றும் அவரின் நண்பர் மனு. பீரேசுக்கும் - நிதினுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நிதினை பீரேஷ் இன்ஸ்டாவில் ஆபாசமாக திட்டி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த நிதின் பீரேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். நேற்று நிதின் மற்றும் மனு சேர்ந்து பீரேஷை சமாதானம் பேசலாம் என அழைத்து சென்று, ஆட்கள் நடமாட்ட இல்லாத பகுதியில் வைத்து பீரேஷை இருவரும் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். 

பலத்த காயமடைந்த பீரேஷை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் விசாரணை செய்து நிதின் மற்றும் மனு ஆகியோரை தேடி வருகின்றனர்.