பூஜைக்கு சென்ற இடத்தில் உல்லாச பூஜை.. அர்ச்சகரின் அந்தரங்க வீடியோ.. ஹனி ட்ராப் தம்பதி பரபரப்பு செய்கை.!

பூஜைக்கு சென்ற இடத்தில் உல்லாச பூஜை.. அர்ச்சகரின் அந்தரங்க வீடியோ.. ஹனி ட்ராப் தம்பதி பரபரப்பு செய்கை.!



Karnataka Mangalore Couple Honey Trap Method Preacher Loss Rs 49 Lakh Amount

அர்ச்சகரை வீட்டில் பூஜை செய்ய வேண்டும் என்று அழைத்து, அவருடன் மனைவி உல்லாசமாக இருக்க, கணவன் வீடியோ எடுக்க, இருவரும் சேர்ந்து அர்ச்சகரை மிரட்டி பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டம், சோமவார்பேட்டை சனிவரசந்தே கிராமத்தை சேர்ந்தவர் பவ்யா (வயது 35). இவரின் முதல் கணவர் மஞ்சுநாத். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பவ்யா கணவரை பிரிந்து சென்றுள்ளார். பின்னர், ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த ராஜு என்ற குமாரை பவ்யா இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். 

இவர்கள் இருவரும் தட்க்ஷிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூர், பதவினன்கடி பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் சிக்கமகளூரை சேர்ந்த அர்ச்சகரை தொடர்புகொண்டு, தங்களுக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று கூறி, வீட்டில் வந்து பூஜை செய்ய கோரிக்கை வைத்துள்ளனர். 

karnataka

இவர்களின் கோரிக்கையை ஏற்ற அர்ச்சகரும் பவ்யாவின் வீட்டில் வந்து பூஜை செய்த நிலையில், பவ்யா அர்ச்சகரை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். முதலில் உல்லாசத்திற்கு மறுப்பு தெரிவித்த அர்ச்சகர், பின்னர் பவ்யாவின் செயல்பாடுகளால் மதியை இழந்து உல்லாசமாக இருந்துள்ளார். இந்த செயல்களை ராஜு ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

உல்லாச வாழ்க்கை முடிந்ததும் விடியோவை அர்ச்சகரிடம் காண்பித்த பவ்யா மற்றும் ராஜு, அர்ச்சகரிடம் இருந்து பணம் கேட்டு மிரட்டி இருக்கின்றனர். மேலும், பணம் கொடுக்காத பட்சத்தில் வீடியோ வெளியிடப்படும் எனவும் மிரட்டி உள்ளனர். இதனை அம்மாநில காவல் துறையினர் ஹனி ட்ராப் டெக்னீக் என்று கூறுவார்கள். 

அதாவது, கணவன் - மனைவி அல்லது பெண் - ஆண் சேர்ந்து, மற்றொரு ஆணை திட்டமிட்டு வீழ்த்தி, அவருடன் பெண் உல்லாசமாக இருந்து அந்த விடியோவை வைத்து பணம் பறிப்பது ஆகும். மேற்கூறிய சம்பவத்தில், தம்பதியின் மிரட்டலுக்கு பயந்த அர்ச்சகரும் ரூ.49 இலட்சம் வரை பணம் கொடுத்துள்ளார்.

karnataka

தம்பதிகள் இருவரும் தொடர்ந்து அர்ச்சகரிடம் பணம் கேட்டு மிரட்டி வந்ததால், அர்ச்சகர் மங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணையை தொடங்க, பவ்யா மற்றும் ராஜு தலைமறைவாகி இருக்கின்றனர். இவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், நேற்று அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். 

இவர்களிடம் இருந்து 4 செல்போன், ரூ.37 இலட்சம் ரொக்கம், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 2 தங்க மோதிரம் போன்றவையும் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், பவ்யா மற்றும் ராஜு ஹனி ட்ராப் முறையில் பலரிடம் பணம் பறித்து ஆடம்பரமாக வாழ்ந்ததும் அம்பலமானது. மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.10 இலட்சம் மதிப்பில் உள்ள வீட்டில் ஒத்திக்கும் குடியிருந்துள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.