அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
மார்டன் உடை அணிந்து மினுக்கிய மனைவி கழுத்தறுத்து கொலை; காதல் கணவன் கொடூர செயல்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜீவன் (வயது 25). இவரின் மனைவி ஜோதி (வயது 22). தம்பதிகள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில், ஜோதி மார்டன் உடை அணிந்து இருக்கிறார்.
இதனால் அவரின் கணவர் ஜீவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. மார்டன் உடைகளை தவிர்க்குமாறும் ஜீவன் வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 30ம் தேதி மனைவியை அங்குள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்ற ஜீவன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
வனப்பகுதியில் இருந்து சடலத்தை மீட்ட அதிகாரிகள், பெண் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மார்டன் உடை அணிந்ததால் கணவர் கொலை செய்தது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் ஜீவனை அதிகாரிகள் கைது செய்தனர்.