முதல் குழந்தையே பெண்ணா?.. தந்தை செய்த பரபரப்பு காரியம்.. 3 மாதம் கழித்து அம்பலமான உண்மை.!

முதல் குழந்தையே பெண்ணா?.. தந்தை செய்த பரபரப்பு காரியம்.. 3 மாதம் கழித்து அம்பலமான உண்மை.!


Karnataka Davanagere Female Baby Murder by Father

கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகெரே, அக்பர் காலனி பகுதியை சார்ந்தவர் மன்சூர். இவருக்கு மில்லத் காலனி பகுதியை சார்ந்த பெண்ணுடன், கடந்த வருடம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தம்பதிகள் இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. 

மன்சூர், ஆண் குழந்தை பிறக்காமல் பெண் குழந்தை பிறந்துவிட்டதே என வருத்தத்தில் இருந்ததாக தெரியவருகிறது. இந்த தகவலை மனைவியிடமும் தெரிவித்து இருக்கிறார். இதனால் குழந்தையை கொலை செய்யவும் முடிவு செய்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை தலைகீழாக பிடித்து தரையில் அடித்து கொலை செய்துள்ளார். 

karnataka

பின்னர், குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதாக மனைவி மற்றும் குடும்பத்தினரை நம்பவைத்த நிலையில், குடும்பத்தினரும் அதனை நம்பி குழந்தையின் உடலை அடக்கம் செய்துள்ளனர். சில நாட்கள் கழித்து விஷயம் குடும்பத்தினருக்கு தெரியவரவே, மன்சூரிடம் குடும்பத்தினர் தகராறு செய்துள்ளனர். 

மன்சூரின் அண்ணன் மைதீனும் குழந்தையின் கொலைக்கு உடந்தையாக இருந்த நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு மன்சூரை அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மன்சூர், அவரின் அண்ணன் மைதீனை கைது செய்தனர். மேலும், இந்த விஷயம் குழந்தை இறந்த 3 மாதங்களுக்கு பின்னரே தெரியவந்துள்ளது.