எங்க போனாலும் இதையே கேக்குறாங்க.. ரொம்பவே அடி வாங்கியுள்ளேன்.! நடிகர் சிம்பு ஓபன் டாக்!!
அண்ணனுக்கு நிச்சியிக்கப்பட்ட பெண்ணுடன் டூயட் பாடிய தம்பி.. அண்ணனின் பரபரப்பு செயலால் படுகொலை.!
தனக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை தம்பி காதலித்து வந்ததால், அண்ணன் தம்பியை படுகொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகெரே மகாலட்சுமி லே-அவுட் பகுதியில், கடந்த 18 ஆம் தேதி ஹரிஹரா பகுதியை சேர்ந்த அல்தாப் (வயது 25) என்பவர் படுகொலை செய்யப்பட்டு பிணமாக இருந்தார். இந்த விஷயம் தொடர்பாக தாவணகெரே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், அல்தாப்பை கொலை செய்தது, அவரின் பெரியம்மா மகன் இப்ராஹிம் (வயது 28) என்பது உறுதியானது. அவரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், நேற்று காவல் துறையினரால் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல் வெளியானது.
இப்ராஹிமுக்கு ஹரிஹரா பகுதியில் வசித்து வரும் பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தில் திருமண தேதி குறிக்கப்பட்ட நிலையில், இப்ராஹிமுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை, அவரின் தம்பியான அல்தாப் காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இப்ராஹிமுக்கு தெரியவந்துள்ளது.
இதனால் தனக்கென நிச்சயம் செய்யப்பட்ட பெண்மணி, தனக்கு கிடைக்காமல் சென்றுவிடுவார் என்ற அச்சத்தில் அல்தாப்பை கொலை செய்ய இப்ராஹிம் திட்டமிட்டுள்ளார். கடந்த 18 ஆம் தேதியின் போது அண்ணன் - தம்பி இருவரும் திருமணத்திற்கு துணி எடுக்க சென்ற நிலையில், மகாலட்சுமி லே-அவுட் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருத்தி அல்தாப்பை இப்ராஹிம் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர், அவர் தனது செல்போனை ஸ்விச் ஆப் செய்து தலைமறைவாகியுள்ளார். காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, இப்ராஹீமை கைது செய்துள்ளனர். இப்ராஹீமை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.