தாய் உயிரிழந்தது தெரியாமல் அழுகிய சடலத்துடன் வாழ்ந்த மகளும் பலி; அடுத்தடுத்து நேர்ந்த சோகம்.!Karnataka Dasanahadi Kundapur Daughter Died after live with Mothers Dead body 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள டசன்ஹடி, குண்டாபுர தாலுகாவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பெண்மணி ஜெயந்தி ஷெட்டி (வயது 62). இவர் தனது மகள் பிரகதி ஷெட்டியுடன் (வயது 32) வசித்து வருகிறார். 

பிரகதி ஷெட்டிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தாயும் - மகளும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதனிடையே, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஜெயந்தி ஷெட்டி உடல்நலக்குறைவால் உயிரிழந்து இருக்கிறார். 

இதையும் படிங்க: உடல் உறுப்பு செயலிழந்து கர்ப்பிணி பெண் பலி: பலாத்காரத்தால் அடுத்தடுத்து நடந்த துயரம்.!

தாய் உயிரிழந்தது தெரியாமல் சோகம்

தனது தாயார் உயிரிழந்த தகவல் கூட அறியாத பிரகதி, கடந்த நான்கு நாட்களாக உயிரிழந்த தாயின் சடலத்துடன் மகள் வசித்து வந்துள்ளார். இதனால் அவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

death

இவர்களின் வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியத்தைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "தலைகீழாகத்தான் குதிப்பேன்" - ரீல்ஸ் மோகத்தால் 100 அடி ஆழ குவாரி குட்டையில் விழுந்த சிறுவன் பலி.! மூச்சுத்திணறி பரிதாபம்.!!