திருமண விருந்தில் விஷம்.? 100+ உறவினர்களுக்கு வாந்தி, பேதி.. அதிர்ச்சி சம்பவம்.!karnataka chitradurga insident 100 lives in hospital whose attend marriage

கோலாகலமாக நடந்த திருமணம் :
கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா பகுதியில் அமைந்துள்ள கல்கெரெ கிராமத்தில் சன்னருத்ரப்பா என்பவரின் மகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்காக ஒரு மடத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. அப்போது நண்பர்கள், உறவினர்கள் என அதிகப்படியானோர் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள திருமணம் விசேஷமாக நடந்தது. 

karnataka

கலவர வீடாக மாறிய திருமண வீடு :
இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நேற்று இரவு விருந்து வைக்கப்பட்டது. அந்த விருந்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட உறவினர்கள் அனைவருக்கும் வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டது. இதனால், பலரும் பரபரப்படைந்தனர். திருமண வீடு கலவர வீடாக மாறியது. உடனடியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையும் படிங்க: தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயற்சி; தண்ணீர் சுத்திகரிப்பானில் பழுது நீக்க வந்த பணியாளர் அதிர்ச்சி செயல்.!

karnataka

விருந்தில் விஷமா.?
இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம். இந்த சாப்பாட்டில் விஷம் கலக்கப்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேககின்றனர். திருமண விழாவில் கலந்துகொண்டு சாப்பிட்டதால் நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "உன் சாதிய என் வீட்டுல ஏத்துக்க மாட்டாங்க" குட் பை சொன்ன காதலன்.! உயிரை மாய்த்த பெண்.!