மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
"குடிக்காதே" என கண்டித்த பாட்டியை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற பேரன்.. பதறவைக்கும் சம்பவம்.!
சரியாக வேலைக்கு செல், இனி குடிக்காதே என கண்டித்த பாட்டியை பேரன் நண்பருடன் சேர்ந்து அடித்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபள்ளாபூர், கவுடனகட்டே கிராமத்தை சேர்ந்தவர் அனுசியம்மா (வயது 60). கடந்த 28 ஆம் தேதி அனுசியம்மா வீட்டின் பின்புறம் கொலை செய்யப்பட்டு, அவரின் உடல் சாக்கில் கட்டி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சேலூர் காவல் துறையினர், அனுசியம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அனுசியம்மாவை மர்ம நபர்கள் கொலை செய்து சென்றிருக்கலாம் என விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையின் போது, மூதாட்டியின் பேரன் யஷ்வந்த் மீது சந்தேகம் திரும்பியுள்ளது.
அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, பேரனால் மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவம் அம்பலமானது. அதாவது, யஷ்வந்த் வேலைக்கு செல்லாமல் குடித்துவந்த நிலையில், அதனை அனுசியம்மா கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த யஷ்வந்த், தனது நண்பருடன் சென்று பாட்டியை உருட்டுக்கட்டையால் அடித்து கொன்று, உடலை சாக்குப்பையில் கட்டி வைத்து சென்றது அம்பலமானது.
இதனையடுத்து, யஷ்வந்த்தை கைது செய்த அதிகாரிகள், அவரின் நண்பரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.