
சிறுமியை சீரழித்து 7 மாத கர்ப்பிணியாக்கிய அர்ச்சகர்.. கண்ணீருடன் கதறி கொடுமையை விவரித்த சிறுமி.!
கோவிலுக்கு சென்று வந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்து 7 மாத கர்ப்பிணியாக்கிய அர்ச்சகர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம், பெட்டெக்குள்ளி கிராமத்தில் 17 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமி உடல்நலக்குறைவால் அவதிப்படவே, அவரை பெற்றோர் சிகிச்சைக்காக அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் 7 மாத கர்ப்பமாக இருக்கிறார் என்று அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் பேரதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது, சிறுமி தெரிவித்த தகவல் பெற்றோர்களை பதறவைத்துள்ளது. சிறுமி அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு அவ்வப்போது சாமி கும்பிட சென்று வந்த நிலையில், சிறுமியிடம் கோவில் அர்ச்சகராக இருந்து வந்த ரவி (வயது 23) பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய அர்ச்சகர் ரவி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானது தெரியவந்த நிலையில், தான் கர்ப்பிணியாக இருப்பதே தற்போதுதான் தெரியும் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில், தகவல் கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு சென்றுவிட, ஆஷா ஊழியர்கள் மூலமாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற காவல் துறையினர் மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தவே, பெற்றோரிடம் புகாரை பெற்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் அர்ச்சகர் ரவியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement