அசுரவேகம்.. சென்டர் மீடியனை தாண்டி, லாரியில் மோதி அப்பளமாக நொறுங்கிய கார்.. 1 மாணவி, 3 மாணவர்கள் பலி.!karnataka-bangalore-urban-hosakote-rash-car-lorry-accid

அதிவேகத்தில் தறிகெட்டு இயங்கிய கார் லாரி மீது மோதி விபத்திற்குள்ளானதில், மாணவி உட்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 2 பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் புறநகர் மாவட்டம், ஒசக்கோட்டே (Hosakote) அட்டூர் கேட் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:15 மணியளவில் கார் அதிவேகத்தில் கோலார் நகரில் இருந்து பெங்களூர் நோக்கி பயணம் செய்தது. திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அதிவேகத்தில் சாலைத்தடுப்பின் நடுவே மோதி எதிர்திசை சாலைக்கு சென்றுள்ளது. 

அப்போது, பெங்களூரில் இருந்து கோலார் நோக்கி வந்த லாரியின் மீது பயங்கர சப்தத்துடன் மோதி நின்றது. இந்த விபத்தில், கார் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், காரில் பயணம் செய்த இளம்பெண் உட்பட 4 பேர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயத்துடன் துடித்துக்கொண்டு இருந்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஒசக்கோட்டை காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெங்களூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

karnatakaK

இதுகுறித்த விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் வைஷ்ணவி, பரத் ரெட்டி, சிரில் வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. மேலும், அங்கி ரெட்டி, ஸ்ரீ கிருஷ்ணா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தை சொந்த ஊராக கொண்ட இவர்கள், பெங்களூர் கே.ஆர் புரத்தில் செயல்பட்டு வரும் கல்லூரியில் பயின்று வருகிறார்கள். 

காரில் சந்தோசமாக ஊர் சுற்றி வரலாம் என்ற எண்ணத்தில் புறப்பட்டு சென்ற நண்பர்களில், வெங்கடேஷ் காரை ஒட்டியுள்ளார். நண்பர்கள் 6 பேரும் கோலார் மாவட்டத்திற்கு சென்று காபி குடித்துவிட்டு, நள்ளிரவில் பெங்களூர் திரும்பியுள்ளனர். அப்போது, அதிவேகத்தில் காரை இயக்கி வந்த வெங்கடேஷ், உறக்க கலக்கத்தில் இருந்துள்ளார். திடீரென வெங்கடேஷின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.