மச்சினிச்சியை கடத்தி சென்ற அக்கா கணவர்.. தவறான மோகத்தால் நடந்த பரபரப்பு சம்பவம்..! கூட்டாளியோடு சிறைவாசம்.!!

மச்சினிச்சியை கடத்தி சென்ற அக்கா கணவர்.. தவறான மோகத்தால் நடந்த பரபரப்பு சம்பவம்..! கூட்டாளியோடு சிறைவாசம்.!!



Karnataka Bangalore Tumakuru Man Kidnap Wife Sister Forced Marriage

தனது மனைவியின் தங்கையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபர், கூட்டாளியுடன் சேர்ந்து பெண்ணை கடத்தி கைதான சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், கொடிகேஹள்ளி மாருதி நகரில் 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 22 ஆம் தேதி இரவு வெளியே சென்ற பெண்மணி, 10.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது, அவரின் இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து வந்த கார், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வழிமறித்துள்ளது.

காரில் இருந்து இறங்கியவர்கள் பெண்ணை கடத்தி செல்ல முயற்சிக்கவே, பெண் தப்பி செல்ல முயற்சித்தும் பலனில்லை. காரில் இருந்த 3 பேர் கும்பல் பெண்ணை கடத்தி சென்றுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் இளம்பெண்ணை மீட்க துரித நடவடிக்கை எடுத்துள்ளனர். 

சம்பவ இடங்களில் இருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இளம்பெண்ணின் அக்கா கணவர் சீனிவாஸ் உட்பட 3 பேர் அவரை கடத்தி சென்றது உறுதியானது. ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூரா பகுதியில் கடத்தி வைக்கப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்ட நிலையில், தேவராஜ் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

karnataka

இவர்களிடம் நடந்த விசாரணையில், "துமகூருவை சேர்ந்த சீனிவாஸ் கொடிகேஹள்ளி மருந்து நகரில் வசித்து வரும் பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் அப்பகுதியிலேயே வசித்து வந்த சீனிவாஸ், பல்பொருள் அங்காடியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். தனது மனைவியின் தங்கையான இளம்பெண் மீது சீனிவாசன் தவறான நோக்கத்துடன் ஆசைவைத்து இருக்கிறார்.

இதனால் அவரை திருமணம் செய்ய எண்ணி, மச்சினிச்சியிடம் தனது ஆசையை கூறியுள்ளார். அதனை தவறு என தெரிந்திருந்த இளம்பெண், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து அக்கா கணவரான மாமாவை கண்டித்து இருக்கிறார். இதனையடுத்து, அவரை கடத்தி திருமணம் செய்யலாம் என்று எண்ணிய சீனிவாஸ், தனது கூட்டாளியான நவீன் குமார் மற்றும் குமார் உதவியுடன் கடத்தியுள்ளனர்" என்பது தெரியவந்தது.

சீனிவாஸ், நவீன்குமார், குமார் ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மூவரையும் சிறையில் அடைத்தனர்.