நீச்சல் குளம் அருகே விளையாடிய 10 வயது சிறுமி, நீரில் மூழ்கி பலி.. பெற்றோர்களே கவனம்.! Karnataka Bangalore Minor Girl Died After Slips Swimming Pool 

நீச்சல் குளம், ஏரிகள் போன்ற நீர்நிரம்பி இருக்கும் இடங்களில் சிறார்களை தனித்து விளையாட அனுமதிக்க கூடாது என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியை சேர்ந்த சிறுமி மான்யா (வயது 10). அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில், தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று சிறுமி குடியிருப்பு வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் அருகே விளையாடிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. பின் சிறுமி காணவில்லை. 

Latest news

மகளை தேடி அலைந்த பெற்றோர், நீச்சல் குளத்தின் அருகே வந்து பார்த்தபோது சிறுமி அதனுள் கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன பெற்றோர், மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

மருத்துவர்கள் சோதித்துவிட்டு சிறுமியின் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி விளையாடிக்கொண்டு இருந்தபோது, தவறுதலாக நீச்சல் குளத்தில் விழுந்து பலியாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை தொடருகிறது.