இரண்டு வாகனம் லேசாக உரசி தகராறு.. வாலிபரை நடுரோட்டில் குத்திக்கொலை செய்த கும்பல்.!karnataka-bangalore-man-killed-by-gang-two-wheeler-cras

சாலையில் செல்லும் போது இரண்டு வாகனங்கள் லேசாக உரசிக்கொண்டதில் தகராறு ஏற்பட்டு, வாலிபர் நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், காட்டன்பேட்டை ஜெய்மதி நகரில் வசித்து வருபவர் சந்துரு (வயது 22). இவர் நேற்று முன்தினத்தில் நண்பர் சைமன் என்பவரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டுள்ளார். பின்னர், பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும் அதிகாலை நேரத்தில் சந்துரு மற்றும் அவரின் நண்பர் சாப்பிட இரு சக்கர வேகத்தில் குட்டதஹள்ளிக்கு சென்றுள்ளனர்.

அப்போது, இவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதனால் இரு வாகன ஓட்டிகளுக்கு இடையே தகராறு நடக்கவே, மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, அதிரடியாக வந்திறங்கிய கும்பல் சந்துருவை தாக்கி, கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளது. 

karnataka

இதனால் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சந்துருவை, அவரின் நண்பர் மற்றும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட சந்துரு, சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஜே.பி நகர் காவல் துறையினர், சந்துருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.