இரத்த வெள்ளத்தில் கிடந்த பாட்டி.. தூக்கில் சடலமாக பேத்தி... பூட்டிய வீட்டில் நடந்து என்ன?. திக்.. திக்.. திக்..!

இரத்த வெள்ளத்தில் கிடந்த பாட்டி.. தூக்கில் சடலமாக பேத்தி... பூட்டிய வீட்டில் நடந்து என்ன?. திக்.. திக்.. திக்..!



Karnataka Bangalore Grand Ma and Grand Daughter Death Mystery

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ஞானபாரதி, மாருதி நகரில் வசித்து வருபவர் ஜெயம்மா (வயது 70). இவரின் மகள் மஞ்சுளா. மஞ்சுளாவுக்கு சேத்தன் என்ற மகன், மமதா என்ற மகள் இருக்கிறார்கள். இவர்களில் மமதாவுக்கு திருமணம் முடிந்து, கணவருடன் கொட்டிகேபாலையா நகரில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், மஞ்சுளாவின் உறவினர் திருமணம் மாண்டியா நகரில் நடைபெற்ற நிலையில், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மமதாவும் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கடந்த 23 ஆம் தேதி இரவில் பாட்டி ஜெயம்மா வீட்டிற்கு மமதா வந்துள்ளார். மறுநாள் காலை மஞ்சுளா, சேத்தன், மமதா ஆகியோர் புறப்பட்டுள்ளனர். 

அப்போது, திடீரென மமதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, அவரை தவிர்த்து மஞ்சுளா மற்றும் சேத்தன் ஆகியோர் மாண்டியாவுக்கு சென்றுள்ளனர். வீட்டில் ஜெயம்மா மற்றும் மமதா இருந்த நிலையில், சகோதரர் தங்கைக்கு தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் மமதாவின் கணவருக்கு சேத்தன் தகவல் தெரிவித்துள்ளார்.

karnataka

அவரும் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் பலனில்லை என்பதால், அவர் மாருதி நகருக்கு வந்துள்ளார். வீட்டின் கதவு சாதாரணமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில், வீட்டின் அறையில் இரத்த காயத்துடன் ஜெயம்மா பிணமாக இருந்துள்ளார். மேலும், படுக்கை அறையில் மனைவி மமதா பிணமாக தொங்குவதை கண்டுள்ளார். 

இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஞானபாரதி நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஜெயம்மாவின் முகம், வாயில் இரத்தம் வந்துள்ளது. வீட்டின் சுவரிலும் இரத்த கறைகள் இருந்துள்ளன. மம்தாவின் கையிலும் இரத்தம் உள்ளது. 

மமதா மட்டும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது உறுதியாகியுள்ள நிலையில், ஜெயம்மா எப்படி உயிரிழந்தார்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.