சரக்கு போதையில் மயங்கியவரிடம் திருட்டு முயற்சி.. சுதாரித்ததால் பயங்கர கொலை.. பரபரப்பு சம்பவம்.! 

சரக்கு போதையில் மயங்கியவரிடம் திருட்டு முயற்சி.. சுதாரித்ததால் பயங்கர கொலை.. பரபரப்பு சம்பவம்.! 


KARNATAKA BANGALORE COLI WORKER MURDERED BY ANOTHER ONE DURING THEFT ATTEMPT

மதுபோதையில் மயங்கி இருந்தவரிடம் செல்போன், பணம் திருட முயற்சித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், காமாட்சிபாளையா பேருந்து நிறுத்தம் மதுபான கடை உள்ளது. இந்த மதுபானக்கடை அருகே, கடந்த பிப். 24 ஆம் தேதி தலையில் இரத்த காயத்துடன் ஒருவர் இருந்து கிடந்துள்ளார். இவரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலையானவரின் தலையில் காலால் தாக்கி அதனால் மரணம் ஏற்பட்டு இருப்பது உறுதியானது. 

விசாரணையில், இறந்து கிடந்தவர் காமாட்சிப்பாளையா நகரை சேர்ந்த சதீஷ் (வயது 28) என்பதும், அவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இவரை கொலை செய்ததாக மற்றொரு சதீஷ் (வயது 26) என்பவர் கைது செய்யப்பட்டார். 

karnataka

சம்பவத்தன்று, கொலை செய்யப்பட்ட சதீஷ் மதுபோதையில் மதுபானக்கடை முன்பே மயங்கி கிடந்த நிலையில், அவரின் பையில் இருந்த செல்போனை சதீஷ் திருட முயற்சி செய்துள்ளார். சுதாரித்த சதீஷ் தகராறு செய்யவே, ஆத்திரமடைந்த திருடன் சதீஷ் கல்லை எடுத்து தொழிலாளி சதீஷின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். 

அதனைத்தொடர்ந்து, சதீஷின் செல்போன் மற்றும் அவரிடம் இருந்த ரூ.500 பணத்தை எடுத்து தப்பி சென்றதும் அம்பலமானது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சதீஷின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.